Tuesday, September 11, 2018

ஆண்களின் பிரச்சினைக்கு தீர்வு

இன்று பெரும்பாலான மக்கள் பல்வேறு நோய்களினால் பாதிக்கபட்டு வருகின்றனர். அவற்றில் சில முக்கியமான நோய்கள் குணப்படுத்த முடியாமலே போய் விடுகிறது. கால மாற்றங்கள், நாகரிக மாற்றங்கள், உணவு பழக்க மாற்றங்கள் இப்படி பல வகையான மாற்றங்கள் நமது உடலின் அமைப்பை மாற்றி கொண்டே வருகின்றன. அந்த வகையில் ஆண்களை பெரிதும் வாட்டி எடுக்கும் ஒரு பிரச்சினை இந்த விறைப்பு தன்மையும், விந்தணு குறைபாடும்தான்.
ஆண்களின் இந்த பிரச்சினைக்கு பல்வேறு விதமான தீர்வுகள் இருந்தாலும், அவற்றில் சில மட்டுமே நல்ல பலனை தருகிறது. குறிப்பாக ஆண்களின் உணவு பழக்கத்தை ஆரோக்கியமான முறையில் வைத்து கொண்டாலே இதற்கு தீர்வு கிடைக்கும். இந்த பதிவில் எந்தெந்த பானங்கள் ஆண்களின் பிரச்சினைக்கு தீர்வு தரும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
முன்னோர்களின் முறையே சிறந்தது...!
எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியை நாம் எட்டினாலும், இவற்றிற்கெல்லாம் அடி தளமாக இருந்தது நம் முன்னோர்கள்தான். அவர்களின் எளிய முறைகளும், அறிவியல் திறனும் எண்ணற்ற நன்மைகளை நமக்கு தந்துள்ளது. ஆண்களின் பிரச்சினைக்கும் நம் முன்னோர்கள் பல வித தீர்வுகளை தந்து விட்டுத்தான் சென்றுள்ளனர்.

பீட்ரூட் ஜுஸ்
ரத்தத்தை நன்கு சுரக்க செய்து, உடலின் செயல்பாட்டை சீராக வைக்க உதவுகிறது இந்த பீட்ரூட். பெண்களுக்கு எந்த அளவில் இது உதவுகிறதோ, அதே அளவிற்கு ஆண்களின் நலனையும் பாதுகாக்கிறது. ஆண்களுக்கு விறைப்பு தன்மை ஏற்பட்டால் பீட்ரூட் ஜுஸ் குடித்து வந்தாலே போதும். எளிதில் இது குணமாகும்.

கற்றாழை ஜுஸ்
பல வித நோய்களுக்கு நிவாரணியாக இருக்க கூடிய இந்த கற்றாழை, ஆண்களுக்கும் நல்ல பலனை தருகிறதாம். இவை ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டெரோனை நன்றாக சுரக்க வழி செய்து, ஆரோக்கியமான இல்லற வாழ்வை தருகிறது. மேலும், இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கட்டுமஸ்தான உடலை தருமாம்.

தர்பூசணி ஜுஸ்
இதில் உள்ள L-citrulline என்ற அமினோ அமிலங்கள் விறைப்பு தன்மையை முற்றிலுமாக குணப்படுத்த உதவுகிறது. மேலும், ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலின் ஆரோக்கியத்தை சீராக வைக்கிறது. இதனால், ஆண்கள் தங்கள் தாம்பத்தியத்தில் திருப்தியை அடைய முடியும்.

இஞ்சி ஜுஸ்
மருத்துவ குணம் கொண்ட நம்ம வீட்டு பொருட்களில் இஞ்சிதான் மிகவும் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. இவை உடல் எடையை கச்சிதமாக வைப்பதோடு ரத்தத்தின் ஓட்டத்தை செம்மைப்படுத்துகிறதாம். மேலும், விந்தணுக்களின் உற்பத்தியை பெருக்க இஞ்சி உதவுகிறது. இதனால், எளிதாகவே குழந்தை பேறை அடைய முடியும்.

தக்காளி ஜுஸ்
தக்காளியை நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வோம். ஆனால், இவற்றில் மருத்துவ குணத்தை நாம் அறியாமலே இருந்திருப்போம். அன்றாடம் தக்காளி சாற்றை பருகி வந்தால், ஆண்களுக்கு ஏற்படும் பிறப்புறுப்பு புற்றுநோயை தடுக்கும். மேலும், பிறப்புறுப்பில் ஏற்படும் வீக்கம், அலர்ஜி போன்றவற்றையும் தடுக்கும்.

மாதுளை சாறு
செக்கச்சிவந்த நிறத்தில் இருக்கும் இந்த மாதுளை பழம் பல வித நன்மைகளை தர கூடியது. இவற்றில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் உள்ளதால், ரத்த ஓட்டத்தை நன்கு அதிகரிக்கிறது. மேலும், இவை விறைப்பு தன்மையை போக்கி, ஆண்களுக்கு ஏற்பட கூடிய புற்றுநோய்களை தடுக்கிறதாம். தினமும் மாதுளை சாற்றை குடித்து வந்தால் இன்பமான இல்லற வாழ்வை ஆண்கள் பெறலாம்.

அவகேடோ ஜுஸ்
வைட்டமின் பி6 மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகம் நிறைந்த அவகேடோ உடலுக்கு அருமையான பழமாகும். இவற்றின் சாற்றை குடித்து வரும் ஆண்களுக்கு ஹார்மோன் பிரச்சினை, விறைப்பு தன்மை, ரத்த சீர்கேடு ஏற்படாதாம். மேலும், உடலில் ஆற்றலை இது அதிகரிக்க உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.



தேனும் பாலும்
எந்த ஒரு மருத்தவ பொருட்களிலும் தேனை பயன்படுத்துவது அற்புதமான ஒன்றாக பல ஆயிரம் ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தேனில் எந்த அளவிற்கு நன்மை உள்ளதோ, அதே அளவிற்கு பாலிலும் உள்ளது. இவை இரண்டையும் சேர்த்து பருகினால் ஆண்களுக்கு இல்லற வாழ்வின் போது அதிக ஆற்றலை இவை தர கூடும்.

வாழைப்பழ மில்ஷேக்
ஆண்மை குறைவு பிரச்சினை உள்ளவர்களுக்கு வாழை பழம் சிறந்த மருந்தாகும். இவற்றில் உள்ள bromelain என்ற நொதி, ஆண்களுக்கான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இதில் இருப்பதால் டெஸ்டோஸ்டெரோனை சீரான முறையில் சுரக்க வைக்கிறது.

இளநீர்
இயற்கை தாயின் அற்புத மருந்தாக விளக்கும் ஒன்றுதான் இளநீர். இவை பல விதமான நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது. அதிகமான எலக்ட்ரோலைட்ஸ் இளநீரில் உள்ளதால் ஆரோக்கியமான உடல் செயல்பாட்டை தந்து, இல்லற வாழ்வில் திருப்பி அடைய வழி செய்கிறதாம். மேலும், இவற்றில் நீர் சத்து அதிகம் இருப்பதால் இவை உடலின் ஆற்றலை மேம்படுத்தும்.

முளைக்கீரை ஜுஸ்
முளைக்கீரை அருமையான உணவாகும். இவற்றில் அதிகமான arginine உள்ளது. இந்த மூல பொருள் இவற்றை நைட்ரிக் ஆக்ஸிடாக மாற்றி கொள்ளும். இவை ஆண்களின் இல்லற வாழ்வை மேற்படுத்தவும், விறைப்பு தன்மை பிரச்சினையை குணப்படுத்தவும் உதவும். இவற்றில் உள்ள அதிகமான ஊட்டசத்துக்கள் உடலின் வலிமையை அதிகரிக்கும்.

கிரீன் டீ
நல்ல வகையான பானமாக இந்த கிரீன் டீயை கூறலாம். மன அழுத்தம், ரத்த சுத்திகரிப்பு, சீரான ஆரோக்கியம் என பல்வகை நன்மைகளை இது தர கூடியது. ஆண்கள், கிரீன் டீயை தொடர்ந்து குடித்து வந்தால் பிறப்புறுப்பு நோய்கள் வராமல் தடுக்கலாம். மேலும், நீண்ட இளமைக்கு இந்த கிரீன் டீ நன்கு பயன்படும்.

நீரே முதல் ஆதாரம்..!
எல்லா வகையான பானங்களை காட்டிலும் நீர்தான் சிறந்த மருந்தாக நம் உடலை பாதுகாக்கும். விறைப்பு தன்மை பிரச்சினைக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதும் ஒரு காரணம்தான். தினமும் 3 லிட்டர் நீர் குடித்து வந்தால் எந்த வித கோளாறுகளும் உடலை அண்டாதாம்.
இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

No comments:

REIKI MASTERS

REIKI MASTERS