Tuesday, October 6, 2020

பாதங்களை பராமரிக்க

 💥நீரிழிவு நோயாளிகள் 

      தமது பாதங்களை முகத்தைப் போன்று நன்கு பராமரிக்க வேண்டும், பாதுகாக்கவேண்டும் என கூறப்படுகிறது.

 💥தினமும் ஒரு முறையாவது பாதங்களைக் கழுவி மெல்லிய பருத்தித் துணியினால் துடையுங்கள். கால்களை கழுவி சுத்தம் செய்ய சுடு தண்ணீரை பாவித்தலை நிறுத்த வேண்டும். ஏனெனில் நோயாளியின் பாதங்களில் சில நேரங்களில் உணர்வு இல்லாததன் காரணமாக அதிக சூடான நீர் பாதங்களைத் தாக்கலாம். கால்களைக் கழுவ சூடான நீர் அவசியமானால் சூடான நீரை பாவனைக்கு எடுப்பதற்கு முன்னர் கையால் அல்லது முழங்கையால் நீரைத் தொட்டுப் பார்த்துவிட்டு பின்னர் காலில் ஊற்றவும் .

 💥கால்களை கழுவுவதற்கு சவர்க்காரம் பாவிக்கவும். எக்காரணம் கொண்டும் ஏனைய இராசாயனப் பொருட்களை பாவிக்க வேண்டாம். கால்களைத் துடைப்பதற்கு மிருதுவான துணியைப் பாவிக்கவும்.. கால்களின் விரல்களின் சந்துகளுக்கிடையில் கவனமாகத் துடைக்கவும் தோலை ஈரலிப்பாக வைத்திருப்பதற்கு பூச்சுக்கள் பாவிக்கலாம்.

💥பாதணிகளை அணிவதன் மூலம், உராய்வையும், அழுத்தலையும் தவிர்க்கலாம். பருத்தியினாலான தளர்வான காலுறைகளை அணிதல். கால்களில் காயங்கள் உள்ளவர்கள் தங்களுக்கென விசேடமான வகையில் தயாரிக்கப்பட்ட பாதணிகளை அணிய வேண்டும்.

 💥தோல், நகம் என்பவற்றில் கால்களை, தோல் தடிப்பு, உராய்வு, புண், கொப்பளம், சிவந்து போதல் என்பன காணப்பட்டால் மருத்துவரிடம் அறிவித்தல்.


· கிருமித்தொற்றிருந்தால் சிகிச்சை எடுத்தல்


· மென்மையான சவர்க்காரம் பாவித்து பாதங்களை தினமும் இருமுறை கழுவுதல்.


· விரலிடுக்குகளை ஈரலிப்பற்ற நிலையில் பேணுதல்.


· நகங்களை நேராக வெட்டி விடுதல் வேண்டும்,வளைத்து வெட்டினால் அவை உட்புறமாக வளரலாம்.

‬ 💥வெறுங்காலுடன் நடப்பதை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும். குளிக்கும் போதும் நித்திரை செய்யும் போதும் மாத்திர GBமே பாதணிகளைக் கழற்ற வேண்டும்.


· கால் கைகளுக்கு நன்கு குருதி ஓட்டம் இருக்கக்கூடியதாக தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுதல்..


· பருமனாக இருப்பவர்கள் உடல் எடையை குறைத்தல்


· மதுபானத்தை மிதமிஞ்சி அருத்தாதிருத்தல்


· கிரமமாக நீரிழிவு கிளினிக்குக்கு சென்று பயிற்றுவிக்கப்பட்ட மருத்துவரிடம் காலை பரிசோதித்துக் கொள்ளல்


· சுத்தமாக்கும் தீராவகங்களை காலுக்கு பயன்படுத்துவதை தவிரத்தல்


· புகைத்தல் கூடாது.

 💥கால்களை குறுக்காக வைத்து இருப்பதைத் தவிர்த்தல்.ஏனெனில் இது கால்களுக்கான குருதியோட்டத்தை குறைப்பதுடன் நரம்புகளிலும் அழுத்தத்தை உண்டாக்குகின்றது.


🔸 Double Awardee 🔸


✈    DR SAKKIAH    ✈

No comments:

REIKI MASTERS

REIKI MASTERS