உடல் வலியை போக்கும் தழுதாழை
மருத்துவா்.ஜெ.ஜெயபிரகாஷ்.
+919840341404
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவம் அந்தவகையில், உடல் வலியை போக்க கூடியதும், காய்ச்சல், தலைவலியை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், பசியை தூண்ட கூடியதுமான தழுதாழைக்கு வாதமடக்கி என்ற பெயரும் உண்டு. இது, வாதத்துக்கு மருந்தாகிறது.
கபத்தை சீர்செய்ய கூடியது. ரத்தசோகையை போக்கும் அற்புதமான மருந்தாக விளங்குகிறது. வீக்கத்தை வற்ற செய்வதுடன், வலியை தணிக்கும் தன்மை கொண்டது. பசியை தூண்ட கூடியது. உடல் தேற்றியாகவும் விளங்குகிறது. தழுதாழை இலையை பயன்படுத்தி ஜீரணத்தை தூண்டும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
தழுதாழை இலைகள், சீரகம், பனங்கற்கண்டு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதில், சிறிது சீரகம், 10 தழுதாழை இலைகள், பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
இதை வடிகட்டி குடித்துவர உடல் வலி சரியாகும். சளி, இருமல் இல்லாமல் போகும். அஜீரண கோளாறை சரிசெய்யும். சாலையோரங்களில் காணப்படும் தழுதாழை மூலிகை பசியை தூண்டும் தன்மை கொண்டது. உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை வெளிதள்ளும் உள் மருந்தாகிறது. தழுதாழையை பயன்படுத்தி உடல் வலி, மூட்டு வலியை போக்கும் மேல்பற்று மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
தழுதாழை இலை, நல்லெண்ணெய்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் எடுக்கவும்.
இதனுடன் நீர்விடாமல் அரைத்து வைத்திருக்கும் தழுதாழை இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும்.
இதை உடல் வலி, மூட்டுவலிக்கு மேல்பூச்சாக பயன்படுத்தலாம். வாத குடைச்சல், வாத பிடிப்பு சரியாகும். உடலில் காற்று அதிகமானால் வலி, பிடிப்பு ஏற்படும். இதற்கு இந்த தைலம் மருந்தாகிறது. உடலுக்கு உஷ்ணம் தரும் தழுதாழையை தைலப்பதத்தில் காய்ச்சி மேல்பற்றாக போடும்போது வாதத்தினால் ஏற்படும் மூட்டுபிடிப்பு, முதுகு பிடிப்பு, மூட்டுவலி, உடல்வலி குணமாகும். தழுதாழை இலைகளை பயன்படுத்தி நீர்கோவை, தலைவலியை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு தழுதாழை இலைகளை போட்டு கொதிக்க வைக்கவும். இதை ஆவி பிடித்து வர காய்ச்சல், தலைவலி குணமாகும்.
இதை தண்ணீருடன் கலந்து குளித்துவர உடல் வலி சரியாகும். ஆவி பிடிப்பதற்கு நொச்சி பயனுள்ளதாக இருக்கிறது. இதேபோல் தழுதாழையும் பயன்தருகிறது. இது தலைநீர் ஏற்றம், மூக்கடைப்பு, நெஞ்சக சளி பிரச்னைகளை சரிசெய்கிறது. சிறுநீரக கற்களை அகற்றும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இதற்கு கொள்ளு, இந்துப்பு மருந்தாகிறது. கொள்ளு கற்களை கரைக்கும் தன்மை உடையது. 2 ஸ்பூன் கொள்ளுவை ஊறவைத்து கஞ்சியாக காய்ச்சி இந்துப்பு சேர்த்து சாப்பிட்டுவர நாளடைவில் சிறுநீரக கற்கள் கரைந்து போகும்.
Acupuncture Group

No comments:
Post a Comment