Friday, October 13, 2017

நிலவேம்பு யாருக்கு தேவை ?

நிலவேம்பு யாருக்கு தேவை ?
-------------------------------------------------------

நேற்று இரவு நிலவேம்பை பற்றி எனக்கு ஒரு எதிர்மறை செய்தி வந்தது. காலை வேறு ஒரு மருத்துவரிடமும் இருந்து வந்த தகவலும் ஒத்துப்போவதாய் இருந்தது.

இதை உறுதி செய்ய எனக்கு தெரிந்து சித்த மருத்துவர்கள் பத்து பேரிடம் பேசினேன்.

அனைவரிடமும் நான் கேட்ட முதல் கேள்வி காய்சல் இல்லாதவர்கள்  நிலவேம்பு கசாயம் குடிக்கலாமா ? என்பதே

அதில் நான்கு மருத்துவர்கள் ஒரு வேளை கூட குடிக்க கூடாது என்றார்கள். நோய் அல்லாதவனுக்கு எதற்கு மருந்து என கேட்டார்கள் ?

டெங்கு என சொல்லப்படும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே சரியான முறையில் தயாரித்து பரிந்துரைக்கப்பட்ட அளவு எடுக்க வேண்டும் என்றனர்.

ஆறு மருத்துவர்கள் கசாயத்தை அனைவரும் குடிக்க தேவையில்லை தான். இருந்தாலும் ஆரோக்கியமாக உள்ளவர்கள் தினம் ஒரு வேளை ஒரு வாரம் குடித்தால் தவறு இல்லை. அதற்கு மேல் குடிக்க கூடாது.

ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் மற்றும் வேறு பிரச்சனைகளுக்கு ஆங்கில மருந்து எடுப்பவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் குடிக்க வேண்டும்.

இது சர்க்கரை அளவை குறைக்கும், எனவே Low Sugar உள்ளவர்கள் ஒரு வேளை கூட குடிக்க கூடாது என எச்சரித்தனர்.

அதில் ஒரு சித்த மருத்துவர் என்னை வறுத்து எடுத்து விட்டார். உன் நோய்க்கு நான் மருத்து சாப்பிடலாமா ?

வருங்காலத்தில் சளிப்பிடிக்கலாம் என்பதால், அதற்கு இன்றே மருந்து எடுக்கலாமா ?

ரோட்டோரத்தில் இருப்பவனுக்கு காய்ச்சல் வருகிறதா ? கொகுசு அரையில் கொசுவிரட்டியுடன் பஞ்சு மெத்தையில் உறங்குபவனுக்கு காய்ச்சல் வருகிறதா ?

மருந்து வியாபாரி, மருந்து தயாரித்து வைத்துவிட்டான். பொய் பித்தலாட்டம் செய்து தான் விற்றாக பார்ப்பான்.

சிறிது காலத்திற்கு முன் இருந்த பன்றிக்காய்ச்சல், சிக்கன் குனியா, எல்லாம் குணமாகிவிட்டதா ?

ஏன் அது இப்பொழுது ஒருவருக்கும் வரவில்லை ? எங்கு போனது அது எல்லாம் ?

வருடத்திற்கு ஒரு முறையாவது காய்ச்சல் வர வேண்டும். அதை ஏன் தடுக்க நினைக்கிறாய் ?

காய்ச்சல் வந்தால் தான் உடல் கழிவுகளை வெளியேறி, புத்துணர்வுடன் செயல்படும்.

காய்ச்சல் வெவ்வேறு வடிவமாக வெளிப்பட்டாலும், அனைத்து காய்ச்சலுக்கும் மூல காரணம் ஒன்றே என்றார்.

இதில் சென்னையை சேர்ந்த மருத்துவர் ஒருவர். நிலவேம்பு, காய்ச்சலை குணப்படுத்தும் ஒரு உன்னதமான மூலிகைதான்.

ஆனால் அது Curative medicine எனப்படும் வந்த பின் காக்கும் மருந்தே தவிர Preventive medicine எனும் வரும் முன் காக்கும் மூலிகை மருந்து அல்ல.

காய்ச்சல் இல்லாமல் இதை உண்டால் ஆண்மை குறைபாடு ஏற்படும். வருங்கால சந்ததிக்கு பிரச்சினை வரும். தயவு செய்து இதை எல்லேருக்கும் தெரியப் படுத்தவும் என எச்சரித்தார்.

அனைத்து மருத்துவர்களிடம் இருந்து கிடைத்த பொதுவான தகவல் என்னவென்றால். இது போன்ற காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் மிகச்சிறந்த மருந்து.

நிலவேம்பு பொடி மட்டும் காய்ச்சி குடிப்பது நிலவேம்பு கசாயமே அல்ல. இது வேலை செய்யாது, முற்றிலும் தவறு.

அதனுடன் சில கூட்டு பொருட்களை சேர்ந்தால் தான் அது நிலவேம்பு கசாயம். இது தான் காய்ச்சலை குணப்படுத்தும்.

நிலவேம்பு கசாயம்

Anti viral
Anti bacterial
Anti fungal

தன்மை உடையது. இது போன்ற அனைத்து சிறப்பு பன்புகளையும் ஒருங்கே பெற்றதால் தான்

அலோபதியால் குணப்படுத்த முடியாத இந்த காய்ச்சலை நமது சித்த மருந்துகள் எளிதாக குணப்படுத்துகிறது.

இதன் கசப்புத்தன்மை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நச்சுக் கழிவுகளை விரைவில் வெளியேற்றும்.

அக்குபங்சர் சிகிச்சை முறையில் கசப்பு சுவை இதயத்திற்கு சக்தி கொடுக்கும்.  இதயத்திற்கு சக்தி கிடைத்தால் இரத்த ஓட்டம் சீர் பெற்று கழிவுகள் எளிதில் வெளியேற வழி வகுக்கும். அனைத்து உறுப்புகளும் நன்றாக இயங்கத்துவங்கும்.

நிலவேம்பு, காய்ச்சலுக்கு மட்டும் அல்ல பல நோய்களுக்கு பயன்படுவதாகவும் முக்கியமாக சர்க்கரை அளவை கட்டுப்படுத்த அற்புதமான மருந்து என்றார்கள்.

சர்க்கரை மற்றும் இதர நோய்  உள்ளவர்கள் சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி இரண்டு மாதம் வரை தொடர்ந்து எடுக்கலாம்.

அனைத்து சித்த மருந்துகளும் ஒரு மண்டலம் வரை தொடர்ந்து எடுக்கலாம். ஆனால் யார் ? எதற்கு ? எவ்வளவு ? எடுக்க வேண்டும் என்பதை சித்த மருத்துவர்கள் முடிவு செய்வார்கள்.

மற்றபடி  ஆரோக்கியமாக உள்ளவர்கள் நிலவேம்பு கசாயம் ஒரு வாரம் வரை எடுத்தால் போதுமானது.

அதற்கு மேல் தொடர்ந்து எடுத்து வந்தால் நிலவேம்பில் உள்ள அதிக கசப்புத்தன்மையால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவது உறுதி என எச்சரித்தனர்.

மற்றும் கல்லீரல் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

சிலர் தினம் வேப்பிலை சாப்பிடுவார்கள் அது தவறு, அதடனுடன் சில கூட்டு பொருட்களை சேர்த்து அளவோடு ஒரு மண்டலம் சாப்பிட்டு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

கசப்பு உடலுக்கு தேவைதான். குறைந்தாலும் பிரச்சனை அதிகமானாலும் பிரச்சனை.

பாகற்காய், சுண்டக்காய், சுக்கட்டி கீரை, முருங்கை கீரை போன்ற உணவுகளை குறைந்தபட்சம் வாரம் ஒரு நாள்

அதிகபட்சம் மாதம் ஒருநாளாவது கட்டாயம் கசப்பு சுவை உணவுகள் சேர்க்க வேண்டும்.

அகத்திக்கீரை மட்டும் மாதம் ஒரு நாள் பயன்படுத்தினால் போதுமானது.

இப்படி உணவில் உள்ள கசப்புகளை சரியாக எடுத்து வந்தாலே, நிலவேம்பு போன்ற மருந்தை எடுக்கும் நிலை வராது.

கசப்பு சுவை பற்றாகுறையால் கூட காய்ச்சல் வரலாம் என்றனர்.

மொத்தத்தில் அதிக கசப்பு உணவுகளையோ மருந்தையோ ஆண்கள் தொடர்ந்து எடுத்தால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்று அனைவரும் எச்சரித்தனர்.

நிலவேம்பு ஒரு அற்புதமான மருந்து

அதை

எதனுடன் ?
எவ்வளவு ?
யாருக்கு ?
எதற்கு ?

கொடுக்க வேண்டும் என்ற தெளிவு வேண்டும்.

மற்றும் சித்த மருத்துவமான நமது தாய் மருத்துவத்தில் மருந்துகளை செய்யும் பக்குவமும், அளவுகளும் மிக முக்கியம்.

இதை சரியாக செய்தால் உலகில் இதை விட சிறந்த மருந்துவம் வேறு எதுவும் கிடையாது என்றார்கள்.

இது தான் நண்பர்களே அந்த பத்து சித்த மருத்துவர்களின் தகவல் தொகுப்பு.

ஆனால் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ? எதோ அம்மன் கோவிலுக்கு கூழ் ஊற்றுவது போல் அரசே ஆங்காங்கே அண்டா அமைத்து காய்ச்சல் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என அனைத்து மக்களுக்கும் நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்கிறது.

அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் அனைத்து குழந்தைகளுக்கும் நாட்கணக்கில் தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள்.

இதை தெரிந்து செய்கிறார்களா ? தெரியாமல் செய்கிறார்களா ? என தெரியவில்லை.

அரசின் தவறான வழிநடத்துதலால் சில தொண்டு நிறுவனங்களும் நீர் மோர் பந்தல் போல் இதை அனைத்து பகுதிகளிலும் விநியோகம்  செய்கிறார்கள்.

ஆங்காங்கே மக்கள் பயத்தின் காரணமாக வீட்டில் நிலவேம்பு செடி வளர்த்து டி, காபி போல் வைத்து குடித்து வருகிறார்கள்.

எனக்கு என்ன வியப்பு என்றால் ஒரு சாதாரன மனிதன் சித்த மருத்துவர்களை அணுகும் போது எனக்கு கிடைத்த இந்த தகவல்,

ஒரு அரசாங்கத்திற்கு கிடைத்திருக்காதா ? என்பதே தற்போது மிகப்பெரிய கேள்வியாய் கண் முன்னே விரிகிறது.

அனைவரும் தொடர்ந்து நிலவேம்பு கசாயம் குடிக்கலாம் என்று அரசிற்கு பரிந்துரைத்த சித்த மருத்துவர்கள் யார் ?

இதற்கு கசாயம் என்ற பெயரே சரி. யார் நிலவேம்பு குடிநீர் என்ற பெயர் வைத்தது ?

ஏன் இது வருடக்கணக்கில் அரசால் தொடர்ந்து விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது ? என்பதெல்லாம் புரியாத புதிராகவே உள்ளது.

எது எப்படியோ, இனி நமது மெய் அறிவை பயன்படுத்துவோம்.

நான் கேட்கிறேன் நிலவேம்பு கசாயம் என்ன பழச்சாறா ? தினம் அனைவரும் குடிப்பதற்கு.

"அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்பதை மறந்தாயா தமிழா ?

"விருந்தும் மருந்தும் மூன்று நாள்" என்பதை மறந்தாயா தமிழா ?

"இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய். என்ற குறளை மறந்தாயா தமிழா ?

"மிகினும் குறையினும் நோய்செய்யும்" என்பதை மறந்தாயா தமிழா ?

நம் மக்களிடம் உள்ள கெட்ட பழக்கம் என்னவென்றால் ஒரு உணவையோ மருந்தையோ உடலுக்கு நல்லது என்று கேள்விப்பட்டு விடக்கூடாது

அது

யாருக்கு ?
எதற்கு ?
எப்படி ?
எப்பொழுது ?
எவ்வளவு ?

என்று யாரும் சிந்திப்பதில்லை. தொடர்ந்து அதை எடுக்க வேண்டியது.

அளவிற்கு மீறினால் அமிர்தமே நஞ்சாகும் போது மருந்து நஞ்சாகாதா தமிழா ?

இனி யார் என்ன சொன்னாலும்

"எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"

என்ற வள்ளுவன் வாக்கை கடைப்பிடித்து மெய்பொருள் காண்போம்.

                                                                           *நன்றி*

No comments:

REIKI MASTERS

REIKI MASTERS