Sunday, October 7, 2018

கடுக்காய் மருத்துவ பயன்கள்

🌰  கடுக்காய மருத்துவ பயன்கள்! 🌰
பல நாட்களாய் ஆறாத புண்.ரணம் இவற்றினை 4 வேளை கடுக்காய்   பற்று ஆற்றிவிடும்.தோல் வியாதி எதுவாயினும் கடுக்காய், வேம்பு,துளசி மற்றும் குப்பைமேனி அரைத்து தடவ நிரந்தரமாய் நீங்கும்.

🌰கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. மூக்கிலிருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த்தூளை எடுத்து மூக்கால் உறிய, ரத்தம் வருவது நின்றுவிடும்.

🌰கடுக்காய் ஓட்டைத் தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.

🌰காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என 48 நாட்கள் இதன் பொடிகளை உட்கொண்டால் நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாளலாம்.

🌰கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

🌰மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டுவர, ஜீரணசக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.

🌰கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்தநோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண்,இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல்நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில்உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு,நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம்,ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய்,மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள்,அனைத்துக்கும் அருமருந்தே கடுக்காய்.

🌰கடுக்காய், கொட்டைப்பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்குநூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல்துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும்.

🌰இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு 5 கிராம் கடுக்காய் தூள் எடுத்து சூடான நீரில் கலந்து பருகவேண்டும். இஞ்சி, சுக்கு, கடுக்காயை ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மேலே குறிப்பிட்டதுபோல் உட்கொண்டால் நன்றாக ஜீரணமாகும். ஜீரணம் ஆன பின்பு மலமும் நன்றாக வெளியேறும்.

🌰கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து, அந்தநீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல், புண் ஆகியன ஆறும்.

🌰கடுக்காயின் தோலைமட்டுமே பயன்படுத்த வேண்டும். உள்ளிருக்கும் பருப்பைப்பயன்படுத்தக்கூடாது. இதன் ஓட்டைப் பொடியாக்கி வைத்துக்கொண்டுபயன்படுத்தலாம்.🌰
🌹🌹🌿Dr. கவிதாராணி, பொள்ளாச்சி அட்டாமா இயக்குநர்.🌹🌹🌿

No comments:

REIKI MASTERS

REIKI MASTERS