Friday, March 17, 2017

உணவே மருந்து - 1

     கீரைத்தண்டு

முன்பெல்லாம் சாதாரணமாக கீரைத்தண்டு தோட்டங்களில் காணப்படும்..!!

விவசாயிகள் தங்களது தோட்டத்திலும் வயலிலும் பயிரிடப்பட்டு சிறுகீரையாக
பறித்து விற்றது போக மீதியை
விதைக்காகவிட்டு வைப்பார்கள்..!!

அவற்றில் விதைக்கான முன்பருவமே
இந்த தண்டுக்கீரை என்பதாகும்..!!

இந்த கீரைத்தண்டு போட்டு செய்யும் மண்டி என்ற செட்டிநாட்டு குழம்பு பிரபலம்..!!

இதில் செங்கீரை, வெண்கீரை என்று இரண்டு வகை உண்டு..!!

கீரைத்தண்டின் இலை, தண்டு, வேர் அனைத்தையும் சமைத்து உண்ணலாம்..!!

மனலாவயல் கீரைத் தண்டு இனிப்புச்சுவை உடையது.!!

கீரைத்தண்டை சமைத்து உண்டால் சிறுநீர் வெளியேறும் போது உண்டாகும் எரிச்சல் குணமாகும். வயிற்று வலிக்கும் நல்லது..!!

வாய்வுத் தொல்லையும் மாறும்.
செங்கீரைத் தண்டு தேகச்சூட்டை மாற்றும். தீராத பித்தத்தைக் குணமாக்கும்.
பென்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்
குணமாகும்...!!

கீரைத்தண்டு நார்ச்சத்து மிகுந்தது. மலச்சிக்கலைப் போக்கும்.
மலம் கழிக்கும் போது ஆசனவாயில் உண்டாகும் எரிச்சலைத் தணிக்கும்..!!

மூலநோயைக் குணப்படுத்தும். கீரைத்தண்டை வெறுமனே தண்ணீரில் போட்டுக் காய்ச்சிக் குடித்தாலும் நிரம்ப பலன் உண்டு. தேகம் குளிர்ச்சி பெறும்..!!

ஆனால் இன்றைய நிலை கீரைத்தண்டு
சமையல் யார் வீட்டிலும் காணமுடிவதில்லை..!!

நமது பாரம்பரிய கீரைத்தண்டை ருசித்துவிடுவோம் என வாங்கி வந்துவிட்டார்கள்..!!

எல்லா நாட்டினரும் நமது பாரம்பரியத்தின் தனித்துவமான, மகத்துவமான விடயங்களைப் புரிந்துள்ளனர். ஆனால் நாம்தான் அவற்றையெல்லாம் தவறவிட்டுவிட்டோம்..!!

நமது பாரம்பரிய கீரைகளை காப்போம்..!!

− திரட்டிய பதிவு

No comments:

REIKI MASTERS

REIKI MASTERS