Friday, March 17, 2017

நீரழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும் என்பது பற்றிய விழிப்புணர்வு பதிவு



கணையம் பாதிக்கப்பட்டு உள்ளதால்தான் இன்சுலின் சுரப்பதில்லை என்போரிடம் இதுவரை எந்த அறிவியல் பூர்வமான விளக்கமோ ஆதாரமோ ஏற்றுக் கொள்ளும் வகையில் கொடுக்கப்படவில்லை.
நீரழிவு நோய் இல்லாத நபரின் கணையத்திற்கும் ஆரம்ப கட்ட நீரழிவு நோயாளியின் கணையத்திற்கும் எந்த வேறுபாடும் இதுவரை சுட்டிக் காட்ட வில்லை.
இவ்வாறு இருக்கையில் எந்த கேள்வியும் கேட்காமல் கணையம் பாதிக்கப்பட்டு உள்ளது என எவ்வாறு நம்ப முடியும் ? . ஆனால் இலட்சக்கனக்கான மக்கள் கணையம் பாதிக்கப்பட்டதால்தான் இன்சுலின் சுரப்பதில்லை என நம்ப வைக்கப்பட்டு உள்ளனர். காரணம் மருத்துவர்களை கடவுளுக்கு நிகராக பார்க்கிறோம். அவர்கள் சொல்வதே வேதவாக்கு.
அதே நேரத்தில் இயற்கை நமக்கு சொல்லும் அனுபவங்களை நாம் மதிப்பதே இல்லை.
30 வருடம் நமது இரத்தத்தில் உள்ள கழிவுகளை சிறுநீராக வெளியேற்றி வந்த சிறுநீரகத்தின் மீது நம்பிக்கை இல்லை. சிறுநீரகம் வெளியேற்றும் சர்க்கரை உடலுக்கு கேடு செய்யும் தரமற்ற கழிவு சர்க்கரை என்பதை நம்ப மறுக்கிறோம்.
அவ்வாறு சிறுநீரகத்தால் வெளியேற்றப்பட்ட சர்க்கரை தரமற்ற கழிவு சர்க்கரை என்பதால்தான் கணையமும் அவற்றிற்கு இன்சுலின் சுரக்காமல் அவை தரமற்ற கழிவு சர்க்கரை என ஒதுக்கி நிராகரித்துள்ளது. இதைப் புரிந்துகொள்ள முடியாமல் கணையத்தை நம்பாமல் கணையத்தின் மீது பழி போடுகிறோம்.
இரத்தத்தில் அதிக சர்க்கரை இருந்தும் உடலில் பலநாள் பட்டினி கிடந்து சர்க்கரை இல்லாதது போன்று அதீத பசி உணர்வு ஏற்படும் போது இரத்தத்திலிருக்கும் அதிக சர்க்கரை உடலால் பயன்படுத்த தகுதியற்ற தரமற்ற கழிவு சர்க்கரை என புரிந்து கொள்ள மறுக்கிறோம்.
அதனால் கணையம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதை மீண்டும் சரி செய்ய மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி நடந்து வருவதால் அதுவரை சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க மருந்துகள் சிபாரிசு செய்யப்படுவதை நம்புகிறோம்.
சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் மருந்துகள் பயன்படுத்தியும் இதயம், சிறுநீரகம் பாதிக்கப்படுவது, காலில் ஆராத புண் ஏற்படுவது, கால் விரலை வெட்டி எடுப்பது போன்றவற்றை கண்முன் கண்டாலும் பிற்காலத்தில் அந்நிலமை நமக்கு வராது என நம்புகிறார்கள் போலும். இந்நிலமைக்கு காரணம் நல்ல நிலையில் இயங்கிக்கொண்டு இருந்த கணையத்தை அது பாதிக்கப்பட்டுள்ளது என கூறி சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க மருந்துகள் கொடுத்து உண்மையிலேயே கணையத்தை பாழ்படுத்துவதே காரணம் ஆகும்.
சிறுநீரகத்தை மதிக்காமல் அது வெளியேற்றும் கழிவு சர்க்கரையை பயன்படுத்துவதாலேயே இவ்வளவு துன்பத்திற்கும் காரணம்.

சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது நீரழிவு நோய் என்றுமே குணமாகாது.

சர்க்கரையை கட்டுக்குள் வைக்காமல் அதே சமயத்தில் உடலுக்கு சக்தியை கொடுக்கும் இயற்கை மூலிகைகளை எடுத்துக் கொள்ளும் போது நீரழிவு நோய் முற்றிலும் குணமடையும்.

நன்றி...


நீரிழிவு நோயின் தாக்கத்தைத் தடுக்கும் காய்கறிகள்

உலகத்திலேயே பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் ஒரே நோய் நீரிழிவு தான். இதற்குப் பலவிதமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், அவை நல்ல ரிசல்ட்டுகளைக் கொடுத்து வந்தாலும், கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளும் அவசியமாகிறது

இயற்கையாக நமக்குக் கிடைக்கும் உணவுப் பொருட்கள் நீரிழிவு நோய்க்கு அருமருந்தாக இருக்கின்றன. இவற்றைச் சாப்பிட்டு வந்தால், ஏற்கனவே நீரிழிவு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. மற்றவர்கள் இதைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், நீரிழிவு நோயையே நெருங்க விடாமல் தடுக்க முடியும்.

நீரிழிவு நோயின் தாக்கத்தைத் தடுக்கும் காய்கறிகள்!!

ப்ராக்கோலி :-

உலகிலேயே மிகவும் சத்தான காய்கறிகளில் ப்ராக்கோலிக்குத் தான் முதலிடம். இதிலுள்ள சல்ஃபோரபேன் என்ற கூட்டு வேதிப் பொருள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளும், அவ்வியாதியைத் தடுக்க நினைப்பவர்களும் தங்கள் உணவில் கண்டிப்பாக ப்ராக்கோலியைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பசலைக் கீரை :-

பசுமையான கீரை வகைகள் அனைத்துமே நீரிழிவைக் கட்டுப்படுத்துவதில் வல்லவை. குறிப்பாக, பசலைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயே நமக்கு வராமல் தடுத்து விடலாம் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

பீட்ரூட் :-

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் பீட்ரூட் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இது பெரிதும் உதவுகிறது. எனவே நாம் எல்லோரும் கண்டிப்பாக பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு :-

இந்தக் கிழங்கில் உள்ள ஆந்தோசையனின் என்ற பொருளுக்கும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது. எரிச்சல் மற்றும் வைரஸுக்கு எதிரான பண்புகளும் இக்கிழங்கில் நிறைந்திருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு அருமையான உணவாகும்.

கேல் :-

கோஸ் வகையைச் சேர்ந்த இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்களான பி-6 மற்றும் கே ஆகியவை மிகுந்து காணப்படுகின்றன. இவை எல்லாம் நீரிழிவின் முக்கிய எதிரிகள் ஆகும்.

முட்டைக்கோஸ்:-

நீரிழிவு நோயைத் தடுப்பதில் முட்டைக்கோஸுக்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு. இரத்தத்தில் உள்ல சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கணையங்களின் முறையான இயக்கத்திற்கும் அது உதவுகிறது. நீரிழிவைக் கட்டுப்படுத்தும் இன்சுலினை சுரப்பதே இந்தக் கணையங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்பாரகஸ் :-

கணையம் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றின் இயக்கங்கள் சிறப்பாக இருப்பதற்கு இது ஒரு முக்கியமான உணவாகும். இன்சுலின் அளவை அதிகரித்து, அதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை இது நன்றாகக் கட்டுப்படுத்துகிறது.

பீன்ஸ் :-

நமக்கு மிகவும் எளிதாகக் கிடைக்கும் காய்கறிகளில் பீன்சும் ஒன்றாகும். நீரிழிவுக்கு எதிரான பண்புகள் பீன்ஸில் நிறைய உள்ளன.

கேரட் :-

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டினுக்கும் ஒரு முக்கியப் பங்கு உள்ளது. மேலும், கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

பூண்டு :-

பூண்டில் உள்ள மருத்துவக் குணங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. நீரிழிவைத் தடுப்பதிலும் பூண்டு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, கொலஸ்ட்ரால்களைக் குறைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின்h அளவையும் பூண்டு குறைக்கிறது.

நன்றி...

No comments:

REIKI MASTERS

REIKI MASTERS