Friday, March 17, 2017

அலர்ஜி

அலர்ஜிக்கான காரணங்கள்

ஒவ்வாமை... இது எப்போது வேண்டுமானாலும் யாருக்கும் வரலாம். நேற்று வரை நன்றாக இருந்த ஒருவருக்கு இன்று திடீரென ஏதோ ஒன்று  அலர்ஜியாகி அவதியைக் கொடுக்கலாம். அலர்ஜிக்கான காரணங்கள் ஆயிரக்கணக்கானவை. சின்ன தூசியிலிருந்து, சூரிய ஒளி வரை எது, யாருக்கு,  எப்போது அலர்ஜியை தரும் என்று சொல்வதற்கில்லை.
அறிகுறிகள்

அரிப்பு, வலி, எரிச்சல், சிவந்து போதல், தடிப்பு, நடுவில் வெள்ளைப் புள்ளியுடன் கூடிய சிவந்த, வட்ட வடிவத் தடிப்புகள் போன்றவை தென்படும். இது சில நிமிடங்களில் இருந்து, சில மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒவ்வாமைக்குக் காரணமான பொருளுடன் மறுபடி தொடர்பு ஏற்படாத வரை  பிரச்னை இருக்காது. கான்டாக்ட் டெர்மாடைட்டிஸ் எனப்படுகிற இந்தப் பிரச்னைக்கு கிட்டத்தட்ட  30 ஆயிரம் காரணிகள் இருப்பதாக  சொல்லப்பட்டாலும், அவற்றில் 25 காரணிகள்தான் பெரும்பாலான அலர்ஜிகளை ஏற்படுத்துகின்றன.
அலர்ஜியின் வகைகள்

உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உடை, உறைவிடம் வரை எது வேண்டுமானாலும் ஒருவருக்கு  ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.  உதாரணத்துக்கு... முட்டை, பால், பாதாம், இறால், சீஸ், மகரந்தம் மற்றும் குறிப்பிட்ட சில மருந்துகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.  சிலருக்கு  வாட்ச், கவரிங் நகைகள், நிக்கல், தங்கம், குரோமியம் உள்ளிட்ட உலோகங்கள் கூட ஒவ்வாமையை உருவாக்கலாம்.

கெமிக்கல் உபயோகத்தாலும் ஒவ்வாமை வரலாம். ஆல்கஹால், டர்பன்டைன், அசிட்டோன், கீடோன், லேட்டக்ஸ், மண்ணெண்ணெய் உள்ளிட்ட  ரசாயனங்களுடன் தொடர்புடைய வேலையில் இருப்போருக்கு இந்த அலர்ஜி வரலாம். வீட்டில் பாத்திரம் தேய்க்கவோ, துணி துவைக்கவோ  உபயோகிக்கிற சோப் மற்றும் டிடர்ஜென்ட் கூட ஒவ்வாமையைத் தரலாம். பியூட்டி பார்லர்களில் வேலை பார்க்கிற பெண்களுக்கு, சோடியம் லாரல்  சல்ஃபேட் உள்ளிட்ட குறிப்பிட்ட சில அழகுசாதனங்களைக் கையாள்வதன் மூலம் ஒவ்வாமை வரலாம்.

போட்டோ கான்டாக்ட் டெர்மடைட்டிஸ் என்பது  துணியால் மூடப்படாத சருமப் பகுதிகளில் உண்டாகக் கூடிய ஒருவித அலர்ஜி. எளிமையாகச்  சொல்வதானால் சூரிய வெளிச்சமும், யுவி கதிர்களும் சருமத்தில் பட்டு, அதன் விளைவாக ஏற்படுகிற ஒவ்வாமை இது. சிவந்த நிறத் தடிப்புகள்,  செதில் செதிலான தோற்றம், சின்னச் சின்ன கட்டிகள் போன்றவை இதன் அறிகுறிகள்.

No comments:

REIKI MASTERS

REIKI MASTERS