Wednesday, April 23, 2014

முத்திரை 3

7. பிராண முத்திரை 

பிராணன் என்பது உயிரைக் குறிக்கும். 
Mudra

செய்முறை 


உங்கள் மோதிர விரலையும் சுண்டு விரலையும் வளைத்து அதன் நுனியால் கட்டை விரலின் நுனியைத் தொடவேண்டும். மற்ற இரண்டு விரல்கள் நேராக விரிந்து இருக்க வேண்டும். 

சிறப்பம்சம் 
உயிர்ச் சக்தியை அதிகரித்து உடல் பலவீனத்தைக் குறைக்கும். இரத்தக் குழாயில் உள்ள இறுக்கத்தை நீக்கும். 

நேர அளவு 
இம்முத்திரையைச் செய்ய குறிப்பிட்ட கால அளவு கிடையாது. எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். 

நன்மைகள் 
உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தும். 
கண்கள் தொடர்பான நோய்களை நீக்கும். 
மனச்சோர்வையும், உடலின் வைட்டமின் குறைபாடுகளையும் நீக்கும். 

8. அபனா முத்திரை 

அபனா என்பது செரிமானத்தைக் குறிக்கும் 

Mudra

செய்முறை 
உங்களுடைய நடுவிரல் மற்றும் மோதிர விரலின் நுனி, கட்டைவிரலின் நுனியைத் தொட வேண்டும். மற்ற இரண்டு விரல்கள் விரிந்து நேராக இருக்க வேண்டும். 

சிறப்பம்சம் 
இம்முத்திரை, கழிவு மண்டலத்தை சீரமைப்பதால் இது உடல் நலம் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

நேர அளவு 
தினமும் 45 நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும். அதிகமாகச் செய்தாலும் பயன்தான்! 

நன்மைகள் 
உடலின் கழிவுப்பொருட்களை வெளியேற்ற உதவும். 
நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும். 
மூலம், மலச்சிக்கல் போன்றவற்றைக் குணப்படுத்தும் 

9. அபனவாயு முத்திரை 
இது இதயத்தைக் குறிக்கின்றது. 

Mudra

செய்முறை 
உங்கள் நடு மற்றும் மோதிர விரல்களின் நுனி, கட்டை விரலின் நுனியைத் தொடுவதோடு ஆள்காட்டி விரலின் நுனி, கட்டைவிரலின் அடிப்பகுதியைத் தொட வேண்டும். சுண்டு விரல் விரிந்து நேராக இருக்க வேண்டும் 

சிறப்பம்சம் 
இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம். உடலில் ஏற்படும் வாயுவையும் கட்டுப்படுத்தும். 

நேர அளவு 
உங்களுக்கு எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை செய்யலாம். இதய நோயாளிகளும், இரத்தக் கொதிப்பு நோயாளிகளும், இதனை தினசரி 15 நிமிடங்கள் செய்ய வேண்டும். முடிந்தால் ஒரு நாளைக்கு இரண்டு வேளை செய்யலாம். 

நன்மைகள் 
இதயத்திற்கு வலுவை ஏற்படுத்தி இதயத் துடிப்பைச் சீர்ப்படுத்தும். கழிவுமண்டலத்தைக் காக்கும். வாயுத் தொல்லையை சீர்படுத்தும். 

10. லிங்க முத்திரை
Mudra

செய்முறை 
உங்கள் இரண்டு கை விரல்கள் அனைத்தையும் கோர்த்துக் கொள்ளுங்கள். கோர்த்திருக்கும் வலக்கை ஆள்காட்டி விரல் நுனியால், அதே கையின் கட்டைவிரல் நுனியைத் தொடவேண்டும். இப்போது அந்த இரு விரல்களின் நடுவில் இடக்கை கட்டை விரல் இருப்பதைப் பார்ப்பீர்கள். அக்கட்டை விரலை நேராக வைத்துக் கொள்ளுங்கள். அதாவது நடுவில் நிற்கும் இடக்கை கட்டை விரலுக்கு வலக்கை விரல்கள் இரண்டும் இணைந்து மாலை போல இருக்க வேண்டும். 

சிறப்பம்சம் 
உடலில் சூட்டை ஏற்படுத்தும். எனவே, இதைச் செய்யும்போது மோர், நெய், தண்ணீர் இவற்றை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். 

நேர அளவு 

உங்கள் தேவைக்கேற்ப செய்யுங்கள். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். இதை அதிகமாகப் பயிற்சி செய்தால் உடலின் சூடு அதிகரிக்கும். குளிர்காலத்திலும் வியர்வையை ஏற்படுத்தும். 

நன்மைகள் 
மார்பு சளித்தொல்லையை நீக்கி விடும். 
நுரையீரலுக்கு வலிமை ஊட்டும். 
சளி, இருமல்,கபம் போன்றவற்றை சீர் செய்யும். 
உடலுக்குள் உத்வேகத்தை ஏற்படுத்தும். 

என்ன வாசகர்களே! எளிமையாக கைவிரல்களால் போடப்படும் முத்திரைகளால் இத்தனை பயன்களா.. என ஆச்சரியமாக இருக்கிறதா? செயல்படுத்திப் பாருங்கள்; பயன்களை அனுபவத்தில் உணர்வீர்கள். 

Disclaimer: இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பல்ல. இவற்றை செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம். 

No comments:

REIKI MASTERS

REIKI MASTERS