இரத்த அழுத்தம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு
உயரளவிலேயே நிலையாக இருந்தால், அது உயர் இரத்த அழுத்தமாகக் கருதப்படுகிறது.
இதனை ஹைப்பர்டென்ஷன்
என ஆங்கிலத்தில்
கூறுவர். இதயச் சுருங்கியக்க அழுத்தம் 160 மி.மீ பாதரச அளவுக்கும், இதய விரிவியக்க அழுத்தம் 95 மி.மீ. பாதரச அளவுக்கும் சமமாகவோ அல்லது கூடவோ இருந்தால் அந்நிலையை உயர் இரத்த அழுத்த நிலை எனக் கூறலாம் என்று உலக நல்வாழ்வு நிறுவனத்தின் (World Health Organization - WHO) நிபுணர் குழு கருதுகிறது. ஆனால் மருத்துவ அறிஞர்களிடையே, உயர் இரத்த அழுத்தத்தின் துவக்க நிலையை அறுதியிடுவதில் பலவகைக் கருத்துகள் நிலவுகின்றன என்றே கூற வேண்டும். பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோரிடையே உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டுபிடித்தல், தடுத்தல், மதிப்பீடு செய்தல் மற்றும் சிகிச்சை அளித்தலுக்கான அமெரிக்கத் தேசிய இணைப்புக் குழுவினரின் ஆறாவது பொது அறிக்கை, இரத்த அழுத்தத்தைக் கீழ்க்கண்டவறு வகைப் படுத்துகிறது:
இரத்த அழுத்த வகைப்பாடு இதயச் சுருங்கியக்க அழுத்தம் (மி.மீ. பாதரச அளவு) இதய விரிவியக்க அழுத்தம் (மி.மீ. பாதரச அளவு)
உகந்த நிலை <120 span="">
இயல்பு நிலை <130 span="">
இயல்புக்கு மேற்பட்ட நிலை: 130 - 139 85 - 89
உயர் இரத்தஅழுத்தம் நிலை 1: 140 - 159 90 - 99
உயர் இரத்தஅழுத்தம் நிலை 2: 160 - 179 100 - 109
உயர் இரத்தஅழுத்தம் நிலை 3: 180 - 209 110 - 119
இரத்த அழுத்தத்தை அளவிடும் முறை
இரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கு குருதி அழுத்தமானி (sphygmomanometer) என்னும் கருவி பயன்படுத்தப்படுகிறது. பாதரச அழுத்தமானியுடன் (Mercury Manometer) இணைக்கப்பெற்ற காற்றினால் உப்பும் ஒரு கச்சையை (inflatable cuff) நோயாளியின் தோளுக்குக் கிழே மேற்புறக் கையைச் சுற்றி நன்கு கட்டுவர். இதனால் கையிலுள்ள தமனிக் குழாய் அழுத்தப் பெற்று இரத்த ஓட்டம் தற்காலிமாகத் தடைபடுகிறது. அடுத்து உப்பிய கச்சையிலுள்ள காற்று வெளியேற்றப்படும். இதே வேளையில் இரத்த அழுத்தத்தை அளவிடுபவர், ஸ்டெதெஸ்கோப் எனப்படும் மார்பாய்வியை முழங்கையிலுள்ள மேற்கைத் தமனியில் வைத்து, அத்தமனி வழியே இரத்தம் செல்லத் துவங்கும் போது ஏற்படும் நாடித் துடிப்பு ஒலிகளைக் கூர்ந்து கவனிப்பார். தமனியில் ஏற்படும் அழுத்தம், கச்சையின் அழுத்ததை விட அதிகமாகும் வரை துடிப்பு ஒலிகள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும். முதல் ஒலியின் போது ஏற்படும் அழுத்த அளவு, இதயச் சுருங்கியக்க அழுத்தமாகும்; இறுதியாகக் கேட்கும் ஒலியின் போது உண்டாகும் அழுத்த அளவு, இதய விரிவியக்க அழுத்தமாகும். நோயாளியின் உட்கார்ந்த அல்லது படுத்த நிலையில் இரத்த அழுத்தம் மும்முறை அளவிடப்படுதல் வேண்டும்; கடைசி அளவைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கு குறைந்தது அரை மணி முன்பு வரை, புகை பிடித்தல், காஃபி அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். நம் அனைவருக்கும் ஏதோ ஒரு காரணத்திற்காக இரத்த அழுத்த அளவீடு மருத்துவரால் மேற்கொள்ளப்பட்டிருக்கும்; எனவே இதைப்பற்றி நாம் அனைவரும் அறிந்துள்ளோம் என்பதில் ஐயமில்லை.
உயர் இரத்த அழுத்தத்தின் வகைகள்
அடிப்படை உயர் இரத்த அழுத்தம் (Essential hypertension): சாதாரணமாக 95% மக்களுக்கு இந்த வகையான உயர் இரத்த அழுத்தமே காணப்படுகிறது. இது வருவதற்கான அடிப்படைக் காரணமாக எதையும் கூறுவதற்கில்லை.
துணைநிலை உயர் இரத்த அழுத்தம் (Secondary hypertension): ஏறக்குறைய 5% உயர் இரத்த நோயாளிகள் இவ்வகையில் அடங்குவர். இதற்கான சில அடிப்படைக் காரணங்கள் இருப்பதுண்டு. சிறுநீரகம் தொடர்பான நோய்கள், நாளமில் சுரப்பிக் குறைபாடுகள், சில கருத்தடை மாத்திரைகள் ஆகியன உடலில் குருதிச் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படக்கூடும்; கருவுற்ற நிலையில், பெண்களுக்கு இரத்த அழுத்தம் உயர்வதும் உண்டு.
வெள்ளாடை உயர் இரத்த அழுத்தம் (White coat hypertension): மருத்துவரை வெள்ளை ஆடையில் கண்டவுடனே, தற்காலிகமாகத் திடாரென்று சிலருக்குத் தோன்றும் இரத்த அழுத்தம் இது. மருத்துவ மனையை அடைந்தவுடனே, அச்சம் காரணமாக உண்டாவது இவ்வகை இரத்த அழுத்தம். சுமார் 20% நோயாளிகளுக்கு இவ்வகை இரத்த அழுத்தம் உண்டாவதாகக் கண்டறிந்துள்ளனர்.
தீவிர உயர் இரத்த அழுத்தம் (Accelerated hypertension): அண்மையில் இருந்த உயர் இரத்த அழுத்தத்தைவிட, கூடுதலாகத் தற்போது ஏற்பட்டிருக்கும் உயர் இரத்த அழுத்த அளவாகும் இது. கண்களுக்குப் பின்புறம் அமைந்துள்ள ஒளி நரம்பின் இரத்த நாளம் சிதைவுற்று அதனால் உண்டாகும் கண்குமிழ் அழற்சியினோடு (papilledema) தொடர்புடையது இவ்வகைத் தீவிர உயர் இரத்த அழுத்தமாகும்.
அபாயநிலை உயர் இரத்த அழுத்தம் (Malignant hypertension): கட்டுப்படுத்த முடியாத, கடுமையான சிக்கல் நிறைந்த உயர் இரத்த அழுத்த வகையாகும் இது. இந்நிலையில் இரத்த அழுத்தம் மிக உயர்ந்த நிலையை அடைந்துவிடும்.
இடர்க் காரணிகள் (Risk factors)
உயர் இரத்த அழுத்தமே பல்வேறு நோய்களுக்கான இடர்க்காரணியாக அமைகிறது. இருப்பினும் உயர் இரத்த அழுத்தம் உண்டாவதற்கான இடர்க் காரணிகளை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று தடுக்கக் கூடிய அல்லது மாற்றக் கூடிய இடர்க் காரணிகள்; மற்றொன்று தடுக்க இயலா இடர்க் காரணிகள்.
தடுக்க இயலா இடர்க் காரணிகள் (Non-modifiable Risk Factors)
அ) வயது: ஆண், பெண் இரு பாலருக்கும் வயது கூடக் கூட, இரத்தம் அழுத்தம் கூடுவதும் தவிர்க்க இயலாததாகிறது.
ஆ) மரபு வழிக் காரணங்கள்: ஆய்வு முடிவுகளின்படி, இயல்பான இரத்தம் அழுத்தம் உள்ள பெற்றோருக்குப் பிறப்பவர்களில், 3% பேருக்கு உயர் இரத்த அழுத்தம் உண்டாகிறது என்றால், உயர் இரத்தம் உள்ள பெற்றோருக்குப் பிறப்பவர்களில் 45% பேருக்கு அது உண்டாகிறது.
தடுக்கக் கூடிய இடர்க் காரணிகள் (Modifiable Risk Factors):
அ) உடற் பருமன்: உடலின் எடை கூடக் கூட, உயர் இரத்த அழுத்தத்திற்கு ஆளாவதும் தவிர்க்க இயலாததாகிறது.
ஆ) உணவில் உப்பின் அளவு: உணவில் உப்பை மிகுதியாகச் சேர்த்துக் கொள்ளுவதாலும் உயர் இரத்த அழுத்தத்திற்கு ஆட்பட வேண்டியுள்ளது. ஒரு நாளைக்கு 7 - 8 கிராம் உப்பு என்பது உயர்ந்த அளவாகும். மிகப் பழங்காலத்தில் குறைந்த அளவு உப்பினை உட்கொண்ட நமது சமூகத்தில் உயர் இரத்த அழுத்தம் என்பது கேள்விப்படாத நோயாக இருந்தது.
இ) அன்றாட உணவுப் பழக்கம்: கொழுப்புப் பொருட்கள், குடிப்பழக்கம் ஆகியன உயர் இரத்த அழுத்தை ஊக்குவிக்கும் உணவுப் பழக்கங்களாகும்.
ஈ) உடலுழைப்பு: தொடர்ந்த உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சியினால் உடலின் எடை குறைவதோடு, இரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும்.
உ) பதற்ற நிலை: உளவியல் காரணங்களும், மன உளைச்சலும், மூளைக்குத் தரும் கடுமையான உழைப்பும் கூட உயர் இரத்த அழுத்தத்திற்குக் காரணங்களாக அமைகின்றன; எனவே அமைதி, மனக் கட்டுப்பாடு, ஆகியன மிகவும் இன்றியமையாதவை.
உயர் இரத்த அழுத்தத்தினால் விளையும் சிக்கல்கள்:
மூளை வாத நோய் (Stroke): உயர் இரத்த அழுத்தத்தால், குருதிக் குழாயில் சேதமேற்பட்டு, மூளையில் குருதிப் போக்கு ஏற்படுவதால் இந்நோய் உண்டாகிறது. இது உயிருக்கே உலை வைக்கக்கூடிய நோயாகும்.
உயர் இரத்த அழுத்த மூளை நலிவு நோய் (Hypertensive Encephalopathy): பேச்சுக் கோளாறு, பார்வைக் கோளாறு, அசாதாரணப் புலனுணர்வு, வலிப்பு நோய், மனநிலை மாற்றம் ஆகிய நோய்களும், நரம்புத் தொடர்பான நோய்களும் இதன் காரணமாக உண்டாகும்.
உயர் இரத்த அழுத்த விழித்திரை நோய் (Hypertensive Retinopathy): விழித்திரை அருகிலுள்ள இரத்த நாளங்கள் சுருங்கி, இரத்த ஓட்டம் குறைவதோடு, இரத்தக் கசிவும் ஏற்படும் வாய்ப்பு உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு உண்டாகிறது.
இதயக் கோளாறுகள் (Cardiac Complications): உயர் இரத்த அழுத்தம் என்பதே, இதயத்திற்குச் செல்லும் குருதி குறைபாட்டுக்கு வழிவகுக்கும் நோயாகும். உயர் இரத்த அழுத்தம் இதயத்திற்கு மிகுந்த அழுத்தத்தைத் தருகிறது. இதனால் இடது வென்ட்ரிகல் விரிவடைந்து, இறுதியாக அது தன் பணியைச் செய்ய இயலாமல் இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் நின்றுவிடும்.
சிறுநீரகப் பிரச்சினைகள் (Kidney Problems): நீண்ட கால உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகம் தனது பணியைச் செய்ய இயலாமல் பழுதடைந்து போவதற்கு வழி வகுக்கும்.
உயர் இரத்த அழுத்தத்திற்குச் சிகிச்சை அளித்தல்:
உயர் இரத்த அழுத்த நோயாளிக்குச் சிகிச்சை அளிப்பதன் முக்கிய நோக்கம், நோய்க்கு உரிய இடர்க் காரணிகளைக் கண்டறிந்து, அவற்றிற்கு உரிய மருத்துவ முறைகளை மேற்கொண்டு, நோயாளி நீண்ட நாள் வாழ வழி வகுத்தலே ஆகும். துணைநிலை உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு, உரிய மருந்துகளைத் தருவதோடு, நோய்க்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து, அவற்றிற்கும் உரிய சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம். உயர் இரத்த அழுத்த நோய் வராமலே தடுப்பதற்கான வருமுன் காக்கும் கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்றுதல் நலம்.
உணவு முறை: குடிப் பழக்கத்தை முற்றிலும் தவிர்த்தல், சரியான உணவை உட்கொள்ளுதல் ஆகிய இரண்டும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு உகந்த உணவுப் பழக்கமாகும். கொழுப்புப் பொருட்களை உணவில் குறைத்துக் கொள்ள வேண்டும். நார்ச் சத்து நிறைந்த உணவு மிகவும் நல்லது. குறைந்த அளவு உப்பையே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த, உப்பு மிகுந்த, தின்பண்டங்களையும் தவிர்க்க வேண்டும்.
புகை பிடித்தல்: புகை பிடிக்கும் பழக்கத்தை அறவே தவிர்த்தல் இன்றியமையாதது.
உடற்பயிற்சியும், ஓய்வும்: (குறைந்தது வாரத்திற்கு மூன்று நாட்கள், சுமார் 20 நிமிட நேரம்) தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மிகவும் தேவையான ஒன்று; விரைந்து நடத்தல், நீச்சல் போன்றவை உடலைத் தகுதியாக வைத்துக்கொள்வதோடு, இரத்த அழுத்தத்தையும் குறைக்க வழி வகுக்கும்.
ஆழ்நிலைத் தியானம், மூச்சுப் பயிற்சி, யோகப் பயிற்சி ஆகியவையும் இரத்த அழுத்ததைக் குறைக்கப் பயன்படுகின்றன. இவற்றால் உடலுக்கு நல்ல ஓய்வும் கிடைக்கும். ஆனால் இப்பயிற்சிகளின் வாயிலாக மருந்து எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க இயலாது; ஓரளவு மருந்தின் அளவையும், வீரியத்தையும் குறைக்கலாம்.
சி வைட்டமின் சத்துள்ள பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்தலாம். ஏ மற்றும் ஈ வைட்டமின்களுக்கு ரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்தும் குணம் இல்லை.
ரத்த அழுத்த நோய்க்கு மருத்துவ சிகிச்சைகளை விட, மனதை இலகுவாக்க உதவும் தியானப் பயிற்சியே சிறந்த மருந்து என்பதை சர்வதேச மருத்துவ ஆய்வுகள் உறுதியாகக் கூறுகின்றன.
ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்த மருந்துகளைவிட அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்துகொள்வதும் உணவுக் கட்டுப்பாடும், உடல் மன பயிற்சியும் அவசியம். 130>120>

ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்த மருந்துகளைவிட அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்துகொள்வதும் உணவுக் கட்டுப்பாடும், உடல் மன பயிற்சியும் அவசியம்.
No comments:
Post a Comment