Wednesday, April 23, 2014

ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள்..

ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள்..

மனித மூளையில் 100 பில்லியன் நரம்பணுக்கள் உள்ளன. இவை உணவில் கிடைக்கும் வைட்டமின்களைப் பொறுத்து இரசாயன மாற்றங்கள் ஏற்படுத்தியபடி இருக்கின்றன.

ஒரு நாளைக்குப் பத்து இலட்சம் தடவைகளுக்கு மேல் நமது சிந்தனைகளை வகைப்படுத்தும் வேலையை மூளை செய்து கொண்டிருக்கிறது. தினசரி நம் உணவில் கிடைக்கும் (எரிக்கும்) மொத்தக் கலோரியல் முப்பது சதவிகிதத்தை மூளைதான் பயன்படுத்திக் கொள்கிறது. எனவே வயது வித்தியாசம் இன்றி மூளை நன்கு செயல்பட வேண்டும் எனில் இனிப்பு மற்றும் மாவுச்சத்துப் பொருட்களில் உள்ள குளுகோஸில் இருந்துதான் தேவையான சக்தி தொடர்ந்து கிடைக்க வேண்டும். இந்தச் சத்துணவில் குறைவு ஏற்படும் போது ஞாபக சக்தியிலும் சிக்கல் வந்துவிடுகிறது.

இது மட்டுமல்ல இரத்த ஓட்டம் தேவையான ஆக்ஸிஜனை மூளைக்கு விநியோகித்து புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதும் முக்கியமானது. தேவையான சத்துணவு கிடைக்காத போது மூளைக்கு ஆக்ஸிஜன் கிடைப்பது குறைந்த ஞாபகசக்தியில் குறைபாடு ஏற்படுகிறது.

இதைத் தடுக்க சிறந்த உணவு முறையையே மருந்தைப்போல் பயன்படுத்தினால் புத்திக்கூர்மையும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

ஞாபக சக்தி குறைவாக இருப்பவர்கள் pyridoxine என்ற வைட்டமின் அதிகம் உள்ள பாதாம் பருப்பு சோயா பீன்ஸ் முதலியவற்றை நன்கு உணவில் சேர்க்க வேண்டும். இது நம் உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய உப்பு வகைகளை சமன் செய்து உடலை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இத்துடன் பி12 வைட்டமினை உடல் ஏற்றக் கொள்ளவும் உதவுகிறது.

தேவையான அளவு ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட பாலிக் அமிலம் அதிகம் உள்ள தண்டுக்கீரை கொண்டைக்கடலை முதலியவற்றை சேர்த்துக் கொள்வது அவசியம்.

பால் தயிர் மற்றும் அசைவ உணவு வகைகளால் பி12 கிடைப்பதால் சோம்பேறித்தனம் குறையும். சைவ உணவுக்காரர்கள் பி12ஐ ஊசியாகப் போட்டுக் கொள்ளவும்.

அரிசி கோதுமை கேழ்வரகு மேற்கண்ட உணவு வகைகளுடன் இரும்புச்சத்து நிறைந்துள்ள பேரிச்சம்பழம் பட்டாணி முதலியவற்றையும் தினமும் உணவில் சேர்த்து வந்தால் நரம்புமண்டலம் அமைதியாகி மூளை சுறுசுறுப்பாக இருக்கும். இது சிந்தித்து செயல்படுவதில் அக்கறை காட்டத் தூண்டிக் கொண்டே இருக்கும். இந்த உண்மைகளை போஸ்டனின் டப்டஸ் பல்கலைக் கழகமும் வேல்ஸின் ஸ்வான்ஸீ பல்கலைக்கழகமும் பல ஆண் பெண்களையும் பரிசோதனை செய்து கண்டுபிடித்தன.

எல்லா வயதுக்காரர்களும் கூர்மையாகச் சிந்திக்க அரிசி பருப்பு மற்றும் பழவகைகளைத் தவிர்த்துவிடாமல் உணவில் சேருங்கள்.
ஆரஞ்சு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், முலாம்பழம், பேரீச்சம்பழம், காரட், அன்னாசி, காலிபிளவர், முட்டைக்கோஸ், பசலைக்கீரை, கொத்துமல்லி, முருங்கைக்கீரை, பச்சைப் பட்டாணி, பால், தயிர், ஈரல் போன்ற உணவு வகைகளில் உள்ள பீட்டா கரோட்டின் வைட்டமின் சி இரும்புச்சத்து முதலியன ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லவை.

இனிப்பு வகைகளைச் சாப்பிடுவதால் அசிட்டியல்சோலைன் என்ற பொருளை மூளை நரம்புகள் வெளியேற்றுகின்றன. இதனால் ஞாபசக்தி அதிகரிக்கிறது. குளுகோஸ் சாப்பிடுவது நன்று. இல்லையெனில் மாதம் ஒரு நாள் கோதுமை அல்வா சாப்பிடலாம். இதில் சோலைன் அதிகம் இருக்கிறது. ஆனால் முடிந்தவரை இயற்கை இனிப்புகளையே விரும்புங்கள். செயற்கை இனிப்புத் தேவை இல்லை. ஆக ஞாபகச் சக்தியையும் சிந்தனைத் தெளிவையும் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவின் மூலம் எளிதில் அதிகரித்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

No comments:

REIKI MASTERS

REIKI MASTERS