Thursday, April 24, 2014

சித்த வைத்திய குறிப்புகள்

சித்த வைத்திய குறிப்புகள்
கண் சூடு:- நெல்லிக்காய் சாறு பிழிந்து இரு வேலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர குணமாகும்.
காது வலி:-
நல்லெண்ணெயில் வெள்ளைப்பூண்டு,பெருங்காயம்.கற்பூரம் போட்டுக் காய்ச்சி தினசரி 3 வேளை இரண்டு சொட்டு விட்டு வந்தால் குணமாகும்.
தொண்டை வலி:-
விளக்கெண்ணெய்,சுண்ணாம்பு கலந்து சூடு செய்து பொறுக்கும் பதத்தில் தொண்டையில் தடவி வர குணமாகும்.

வாய்ப்புண்:- 
நெல்லி,மா இலைச்சாறு நீரில் காய்ச்சி வாய் கொப்பளிக்கவும்.

ஜலதோசம் நீங்க:- 
துளசி சாறுஇஞ்சி சாறு சம அளவு கலந்து குடிக்கலாம்.
  
இருமல் குணமாக:-
 மஞ்சள்மிளகுத்தூள்பனங்கற்கண்டு பாலில் சேர்த்து இரவில் பருகி வர இருமலைக் கட்டுப்படுத்தும் 
நாக்குப்புண்:-
 தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து பருகலாம்.

பற்கள் உறுதி பெற;-
 மாதுளம் பழம் அடிக்கடி சாப்பிடலாம்.
  
நல்ல தூக்கம் வர:-
 சீரகத்தை வறுத்துப் பொடி செய்து வாழைப் பழத்துடன் சாப்பிடலாம்.
பசியைத் தூண்ட:-
பிரண்டைத் துவையலை சாப்பிட்டு வர பசியின்மை நீங்கும்
தொகுப்பு:

No comments:

REIKI MASTERS

REIKI MASTERS