Thursday, April 24, 2014

மருத்துவ குணமுள்ள நெல்லிக்காய்

மருத்துவ குணமுள்ள நெல்லிக்காய்
நெல்லி மரம் ஒரு சிறிய மரம். இமாலயப் பகுதிகளிலும்தமிழ்நாட்டிலும் அதிகமாக வளர்கிறது. தமிழகத்தில் வளரும் நெல்லிக்காய் சிறியளவில் கொஞ்சம் துவர்ப்பும்புளிப்பும் அதிகம் கொண்டதாக இருக்கும். வடநாட்டில் வளரும் நெல்லி பெரிதாக இருக்கும்.
பல மருத்துவக் குணங்களும் சேர்ந்து இருப்பதாலேயே நெல்லியை அனைவரும் உயர்வாகப் புகழ்கிறார்கள்.

நெல்லிக்கனியை உண்டு தண்ணீரைக் குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும். இதன் காரணமாகவே கிராமங்களில் கிணற்றுத் தண்ணீர் ருசியாக இல்லாவிட்டால்நெல்லி மரக்கிளையை வெட்டி கிணற்றில் போட்டுவிடுவார்கள்.தண்ணீர் இனிப்பாக மாறிவிடும்.



பெரியளவில் உள்ள நெல்லிக்காய் ஊறுகாய்க்கும்நெல்லி மொரப்பா செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். சிறியதை ஆயுர் வேத மருந்துகள்ஆயுர்வேத லேகியம் முதலியவை செய்ய பயன்படுத்துகிறார்கள்.



தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்து ணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக் காக இருக்கும். தொற்று நோய்கள் எதவும் தொற்றாது. இருதயம்சிறுநீரகம் பலப்படும்.



ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும்அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.



உடல் சதை பலப்படும். நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும்.



ஒரு ஸ்பூன் நெல்லிக்காய்பொடிஒரு ஸ்பூன் நாவல்பழப் பொடிஒரு ஸ்பூன் பாவற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வரவே வராது. உலர்ந்த நெல்லிக்காயையும்சிறிது வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டால் முடக்குவியாதி குணமாகிவிடும்.



நல்ல சுத்தமான தண்ணீரில் இரண்டு நெல்லிக்காய்களைப் போட்டு ஊறவைத்து அந்தத் தண்ணீரை எடுத்து கண்களை அகல விரித்து கழுவவும். கண்ணுக்குச் சிறந்த மருந்து இது. கண் சிவந்து புண்ணாகுதல் முதலிய வியாதிகளை குணப்படுத்தும்.



அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும் நெல்லிக்காய்க்கு ஒரு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்துநன்றாக கொதிக்க வைத்துபின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும்தலை பளபளப்பாகவும் கருமையாகவும்அடர்த்தியாகவும் இருக்க உதவும்.


தரமான தலைசாயங்களில் நெல்லிவிதையைத் தான் பயன்படுத்துகிறார்கள். நெல்லி மரத்தின் தண்டிலிருந்துஅதன் இலைகாய்பழம் உட்பட எல்லாமுமே கறுப்புத் தன்மை கொடுப்பதால் மைதலைசாயம்தோல்களை வண்ணப்படுத்த உதவுகிறது.



தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை உண்ணும்போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம். அதிலிருந்து முளைத்து உண்டானதுதான் நெல்லிமரமாம்.இத்தனை உபயோகமுள்ள ஒரு மரத்தை தெய்வீக மரம் என்று சொல்லலாமே.....

No comments:

REIKI MASTERS

REIKI MASTERS