Wednesday, April 23, 2014

முத்திரை 2

3. வர்ணா முத்திரை 
வர்ணன் என்பது நீரைக் குறிக்கும் 

 

செய்முறை உங்கள் சுண்டு விரலின் நுனி, கட்டை விரலின் நுனியைத் தொட வேண்டும். மற்ற மூன்று விரல்கள் விரிந்து நேராக இருக்க வேண்டும். 

சிறப்பம்சம் 
உடலில் நீர்த்தன்மையைத் தக்க வைப்பதோடு உடலில் நீரின்மையால் ஏற்படும் நோய்களிலிருந்தும் காக்கும். 

நேர அளவு இதற்கும் குறிப்பிட்ட நேர வரையறை கிடையாது. எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். 

நன்மைகள் உங்கள் உடலினுள் சுத்தத்தை நிலை நிறுத்தச் செய்யும் 
வாயுத் தொல்லையால் ஏற்படும் வலிகளைக் கட்டுப்படுத்தும். 
உங்கள் முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் காக்கும். 

4. வாயு முத்திரை 
வாயு என்பது காற்றைக் குறிக்கின்றது. 



செய்முறை 

உங்கள் ஆள்காட்டி விரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் விரிந்து நேராக இருக்க வேண்டும். சிறப்பம்சம் உடலில் ஏற்படும் வாயு தொடர்பான நோய்களிலிருந்து விடுபட வைக்கின்றது. 

நேர அளவு இந்த முத்திரையை 45 நிமிடங்கள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நோயின் வேகம் 12 முதல் 24 மணி நேரத்திற்குள் குறையும். சிறந்த நிவாரணம் பெற இதை இரண்டு மாதங்களுக்கு விடாமல் செய்து வரவும். 

நன்மைகள் வாத நோய், மூட்டு வலி, கீல் வாதம் ஆகியவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும் 
எவ்வித மருந்தும் உட்கொள்ளாமல் இந்த முத்திரையின் மூலம் பக்கவாதத்தைக் குணப்படுத்தலாம். 
எலும்பு தேய்மானத்தையும் சீர்படுத்தும். 
உங்களை வாயு தொல்லையிலிருந்தும் விடுவிக்கும். 

5. சூன்ய முத்திரை : 

சூன்யம் என்பது வெற்றிடத்தைக் குறிக்கும். 

 

செய்முறை உங்கள் நடுவிரலை சுக்ர மேட்டில் வைத்து அதைக் கட்டை விரலால் அழுத்துங்கள். சிறப்பம்சம் உங்கள் உடம்பின் சோர்வை அது குறைக்கும். 

நேர அளவு 
இந்த முத்திரையை 40 முதல் 60 நிமிடங்கள் செய்யலாம். தேவையென்றால் சோர்வு நீங்கும் வரை செய்யலாம். 

நன்மைகள் உங்களுடைய காது வலியை 4 அல்லது 5 நிமிடங்களில் போக்கும். 
செவிடு மற்றும் புத்தி பேதலிப்பை நீக்கும் - பிறப்பிலிருந்து அல்லாமல் இடையில் ஏற்பட்டிருந்தால் மட்டுமே. 

6. சூரிய முத்திரை 


செய்முறை 

உங்கள் மோதிர விரலை வளைத்து, கட்டை விரலின் அடிப்பகுதியைத் தொடுமாறு கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் விரிந்து நேராக இருக்க வேண்டும். 

சிறப்பம்சம் 
உடலில் உள்ள தைராய்டு சுரப்பியின் மையப்பகுதியை செயல்படுத்தச் செய்கிறது. 

நேர அளவு தினமும் 5 முதல் 15 நிமிடங்கள் வரை பயிற்சி செய்ய வேண்டும். 

நன்மைகள் உடலின் கொழுப்பைக் குறைத்து உடல் பருமனைக் குறைக்கச் செய்யும். படபடப்பைக் குறைக்கும் அஜீரணக் கோளாறுகளை நீக்கும். 

(மீதி அடுத்த இதழில்) 

Disclaimer: இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பல்ல. இவற்றை செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்

No comments:

REIKI MASTERS

REIKI MASTERS